கேரள மாநிலம் மலப்புரத்தில் உள்ள ஒத்துக்குங்கல் நகரைச் சேர்ந்தவர் ஏ.கே. ஷிஹாபுதீனின். இவர் கோழி பண்ணை வைத்து வியாபாரம் நடத்திவருகிறார். சுமார் ஒன்பது மாதங்களுக்கு முன்பு, இவரின் பண்ணையிலிருந்த கோழி ஒன்று, பச்சை மஞ்சள் கருவுடன் கூடிய முட்டையிட்டுள்ளது.
இதனால், ஆச்சரியமடைந்த ஷிஹாபுதீனின், அச்சம் காரணமாக பச்சை கரு கொண்ட முட்டையைச் சாப்பிடவில்லை. அதற்குப் பதிலாக, அந்த முட்டையின் மூலம் சில குஞ்சுகளைப் பொரித்து வளர்த்துவந்தார்.
இந்நிலையில், பச்சை முட்டைகள் மூலம் உருவாகிய ஆறு குஞ்சுகளும் நன்கு வளர்ந்து பச்சை நிறத்திலேயே முட்டையிட்டுள்ளது அதிசயத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, பச்சை முட்டையின் புகைப்படங்களைச் சமூக வலைதளங்களில் பதிவிட்டதைத் தொடர்ந்து வைரலாகியுள்ளது. இதைப் பார்த்து வியப்படைந்த பலர் ஷிஹாபுதீனினைத் தொடர்புகொண்டு கோழி குறித்து விசாரித்துள்ளனர்.
இது குறித்து கேரள கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தின் (Kerala Veterinary and Animal Sciences University) விஞ்ஞானிகள் சிறப்பு கோழிகள், முட்டைகள் குறித்து ஒரு ஆய்வைத் தொடங்கியுள்ளனர்.
பல விஞ்ஞானிகள் சில சிறப்பு தீவனங்களை கோழிகள் சாப்பிடும்போது பச்சை மஞ்சள் கருவுடன் முட்டையிடுவதற்கு வாய்ப்பு இருக்கலாம் எனக் கருதுகின்றனர்.
பச்சை மஞ்சள் முட்டை எப்படி வந்தது எனத் தெரியவில்லை. ஆனால், ஷிஹாபுதீனினின் பச்சை கோழி முட்டை உலகளவில் பிரபலமாகியுள்ளது.
இதையும் படிங்க: விவசாய நிலத்தில் உலாவிய அரியவகை ராஜநாகம் - காணொலி