இதுகுறித்து பயங்கரவாத தடுப்புக் குழு அலுவலர் ஒருவர் கூறுகையில், "கடந்த 26ஆம் தேதி, வங்காள தேசத்தைச் சேர்ந்த ஆறு பேர் ஆக்ரா ரயில் நிலையத்தில் வைத்து போலி ஆவணங்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த நாங்கள் அதிரடியாக அவர்களை மடக்கிப் பிடித்து அவர்கள் வைத்திருந்த போலி பாஸ்போர்ட்டுகளை கைப்பற்றினோம்" எனத் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட வங்க தேசவாதிகள் பாகிஸ்தானுக்கு செல்வதற்காக அந்த பாஸ்போர்ட்டுகளை தாயாரித்தது சோதனையில் தெரியவந்தது. அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.