ஜம்மு - காஷ்மீர் பகுதிகளைச் சேர்ந்த 575 இளைஞர்கள் ஸ்ரீநகரில் தங்கள் ராணுவ பயிற்சியை நிறைவு செய்துவிட்டு, இந்திய ராணுவத்தில் இணைந்தனர். மேலும், இந்திய தேசத்திற்கு சேவை செய்வதில் பெருமை கொள்வதாகவும் நம் மண்ணிற்காக உயிர்த்தியாகம் செய்வதற்கு தயாராக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய லெஃப்டிணன்ட் ஜெனரல் அஷ்வினி குமார், சட்டப்பிரிவு 370 பிரிவு நீக்கப்பட்டபின் ஜம்மு - காஷ்மீர் மக்கள் தற்போது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருவதாகவும், காஷ்மீர் பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வந்த நிலையில் தற்போது ராணுவத்தில் இளைஞர்கள் இணைந்திருப்பது வரவேற்பை பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.