டெல்லியில் காற்றின் தரம் குறித்து அமெரிக்க தூதரகம் மற்றும் நுரையீரல் பாதுகாப்பு மையம் இணைந்து ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் டெல்லியின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த, வெவ்வேறு வயதுடைய ஆயிரத்து 757 பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வு முடிவுகள் நேற்று வெளிவந்தன.
இந்த ஆய்வறிக்கையில், “ டெல்லி- என்சிஆர் பகுதியில் காற்று சுவாசிக்கும் நிலையில் இல்லை, ‘மோசம் அல்லது மிகவும் மோசம்” என 57.7 விழுக்காடு மக்கள் மதிப்பிட்டுள்ளனர்.
82.2 விழுக்காட்டினர் காற்று மாசு உடல்நிலை பாதிப்பை உண்டாக்குவதாகத் தெரிவித்துள்ளனர். 38.8 விழுக்காட்டினர் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுள்ளனர் என குறிப்பிட்டுள்ளனர்.
குறிப்பாக, 31.4 விழுக்காட்டினர் மட்டுமே டெல்லி அரசாங்கத்தின் சுகாதார சேவைகள் குறித்து விழிப்புணர்வைக் கொண்டுள்ளதாகவும். காற்றின் தரக் குறியீடு, அதிலிருக்கும் மாசு பொருள்களின் அளவீடு குறித்து 80 விழுக்காட்டினருக்கு விழிப்புணர்வு இல்லை” எனக் குறிப்பிட்டிருந்தது.
காற்று தர குறியீடு (AQI) அளவானது காற்றில் தங்கியுள்ள துகள்கள் (Particulate Matter PM2.5 and PM10) அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
இதையும் படிங்க: கேரளாவில் தம்பதி மரணத்தில் சந்தேகம்: காவல்துறை விசாரணை!