ஹைதராபாத்: 5000 ரோகிங்கிய அகதிகளை கண்காணிக்க மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருந்து சமீபத்தில் வந்த தகவலில், தெலங்கானா மாநிலத்தில் உள்ள ரோகிங்கிய அகதிகளை யூகத்தின் அடிப்படையில் கோவிட்-19 தொற்றின் கீழ் கொண்டுவந்திருப்பதாகவும், மாநில அரசு குறிப்பிட்ட நபர்களும், அவர்கள் தொடர்புடைவர்களையும் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வர அறிவுறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் பலர் ஹரியானா, டெல்லியில் நடைபெற்ற சமய மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்று கூறப்படுகிறது. இதில் பெரும்பாலானோர் நகர எல்லைப் பகுதியில் வெளியில் அமைந்திருக்கும் பாலாபூர் எனுமிடத்தில் உள்ளதாக காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பயண காரணிகள் இருந்த 4 நபர்களை பிடித்து காவல் துறை தனிமைப்படுத்தியிருந்தது. அவர்களுக்கு கரோனா நோய்க் கிருமி தொற்று இல்லை என்பது சோதனை முடிவில் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.