நாக்பூரில் மயோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஐந்து பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டனர். அதில், ஒருவருக்கு மட்டும் கொரோனா பாதிப்பு இல்லை என்று உறுதியான நிலையில், திடீரென்று 5 நபர்களும் மருத்துவனையிலிருந்து தப்பியோடினர்.
ஐவரையும் காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், இன்று முன்று பேர் மருத்துவமனைக்குத் திரும்பி வந்தனர். இதைத் தொடர்ந்து, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், தலைமறைவாகவுள்ள இரண்டு நபர்களைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய நாக்பூர் ஆட்சியர், "மாயோ மருத்துவமனையிலிருந்து தப்பிச்சென்ற ஐந்து பேரில் மூவர் திரும்பி வந்துள்ளனர். அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வார்டுக்கு வெளியே பாதுகாப்புக்கு காவல் துறையினர் நிறுத்தப்படுவார்கள்" என்றார்.
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக மும்பை, நவி மும்பை, தானே, நாக்பூர், பிம்ப்ரி சின்ச்வாட் ஆகிய இடங்களில் உள்ள அனைத்து திரையரங்குகள், ஜிம்கள், நீச்சல் குளங்கள் ஆகியவை மார்ச் 30ஆம் தேதி வரை மூடப்படும் என மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அறிவத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அங்கித் சர்மா உடலில் 400 கத்திக் குத்து? உடற்கூறாய்வு அறிக்கை சொல்வதென்ன?