நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவுதல் குறித்த அச்சம் நிலவிவரும் நிலையில், தற்போது கேரளாவில் புதிதாக ஐந்து பேருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இத்தாலி நாட்டிலிருந்து கடந்த பிப்ரவரி மாதம் 29ஆம் தேதி கேரளா வந்த பயணிகள் மூன்று பேருக்கு கொரோனா நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அவர்களுடன் தொடர்பு கொண்ட இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றிக்கொண்டதாகவும் அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே. ஷைலஜா தெரிவித்துள்ளார். இவர்கள் தற்போது கேரளாவில் உள்ள பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ளதாகவும், தொடர் மருத்தவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து கேரளாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை எட்டாகவும், இந்தியாவில் பாதிப்பிற்குள்ளானவர்கள் எண்ணிக்கை 39ஆகவும் அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: ஈரானில் கொரோனா - பலி எண்ணிக்கை 145ஆக அதிகரிப்பு!