குஜராத் மாநிலம் வழியாக போதைப் பொருள் கடத்தப்படவுள்ளதாக அம்மாநில பயங்கரவாத தடுப்புப் பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்து. அதனடிப்படையில் குஜராத் காவல் துறை, கடற்படை உதவியோடு கட்ச் மாவட்டம் ஜக்கௌ கடற்கடை நகர் அருகே அரபிக் கடலில் இன்று அதிகாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, சந்தேகப்படும்படியான கப்பல் ஒன்றை நிறுத்தி சோதனை மேற்கொண்டபோது 35 பாக்கெட்டுகளில் போதைப் பொருட்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. அவற்றைப் பறிமுதல் செய்த அலுவலர்கள், அதில் வந்த ஐந்து பாகிஸ்தானியர்களைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து பேசிய பயங்கரவாத தடுப்புப் பிரிவு அலுவலர் ஒருவர், 'ஜக்கௌ அருகே 35 பாக்கெட்டுகளில் போதைப் பொருட்களைக் கடத்தி வந்த ஐந்து பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடத்தல் காரர்கள் பயன்படுத்திய கப்பலையும் பறிமுதல் செய்துள்ளோம்' என்றார்.
இதையும் படிங்க : துரத்திய கொம்பன் - பயத்தில் மரத்தில் ஏறிய வன அலுவலர்