புதுச்சேரி வெங்கட்டா நகர் பகுதியைச் சேர்ந்தவர் மதன். இவர், 45 அடி சாலையில் ‘மதன் மொபைல்’ என்கிற செல்ஃபோன் கடை வைத்து நடத்திவருகின்றார். கடந்த 22ஆம் தேதி, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் அன்று கடையைப் பூட்டி விட்டுச் சென்றுள்ளார். அன்றிலிந்து தொடர்ந்து, ஊரடங்கு உள்ளதால் அவர் கடையைத் திறக்கவில்லை.
நேற்று அவர் மீண்டும் கடையை திறந்தபோது கடையில் இருந்த 5 லட்சம் மதிப்பிலான விலை உயர்ந்த 16 செல்ஃபோன்கள், 5 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, மதன் பெரியக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: ஊரடங்கை பயன்படுத்தி திருட்டு!