ETV Bharat / bharat

தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்த விபத்தில் 5 பேர் உயிரிழப்பு! - கொதிகலன் வெடிப்பு

மும்பை: நாக்பூரில் செயல்பட்டுவரும் தனியார் தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்த விபத்தில் ஐந்து பணியாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

boiler blast
boiler blast
author img

By

Published : Aug 1, 2020, 8:39 PM IST

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மாவட்டத்திலுள்ள பெல்லா கிராமத்தில் இயங்கிவரும் தனியார் தொழிற்சாலையில் இன்று (ஆகஸ்ட் 1) பிற்பகல் கொதிகலன் ஒன்று வெடித்தது. இந்த விபத்தில் ஐந்து பணியாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

உயிரிழந்த அனைவரும் வாட்கான் கிராமத்தைச் சேர்ந்தவர்களாவர். இதில் ஒருவர் வெல்டராக பணியாற்றியவர் என்றும், மற்ற நால்வரும் உதவியாளர்கள் எனவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராகேஷ் ஒலா ஆய்வு செய்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: இந்துஸ்தான் கப்பல் கட்டும் தளத்தில் கிரேன் விபத்து; 10 பேர் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.