ETV Bharat / bharat

கன்றுக்குட்டியை மீட்க முயன்று ஐந்து பேர் உயிரிழந்த பரிதாபம்; கன்று உயிர் பிழைத்த அதிசயம் - கிணறு கன்றுக்குட்டி

கிணற்றில் விழுந்த கன்றுக்குட்டியை மீட்க முயன்று விஷவாயு சுவாசித்ததில் ஐந்து பேர் உயிரிழந்த பரிதாபம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.

rescue calf
rescue calf
author img

By

Published : Sep 8, 2020, 10:55 PM IST

உத்தரப் பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரது கிணற்றில் கன்றுக்குட்டி ஒன்று தவறிவிழந்துவிட்டது. இந்த கன்றுக்குட்டியை மீட்க மூன்று பேர் கிணற்றில் இறங்கியுள்ளனர்.

மூவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். இவர்களை கிணற்றிலிருந்த விஷவாயுத் தாக்க மூவரும் மயங்கி விழுந்துள்ளனர்.

விவரமறிந்த அக்கம் பக்கத்தினர் ஒடிவந்து அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து, அவர்களை காப்பாற்ற இருவர் கிணற்றில் இறங்கியுள்ளனர்.

அவர்களும் விஷவாயுத் தாக்கி மயங்கிய நிலையில், இந்த விவகாரம் காவல்துறையின் காதுகளுக்கு சென்றது.

இதையடுத்து, தீயணைப்பு படையினர் அங்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். கிணற்றுக்குள் இறங்கிய ஐவரும் விஷவாயு தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதேவேளை, கன்றுக் குட்டி உயிருடன் மீட்கப்பட்டதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: உ.பி.,யில் அதிகரிக்கும் தலித் மக்கள் மீதான தாக்குதல் - மாயாவதி குற்றச்சாட்டு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.