உத்தரப் பிரதேசத்தில், படோஹி மாவட்டத்தை சேர்ந்தவர் மஞ்சு. இவருக்கு ஷங்கர் (6), கேசவ் (3), ஆர்த்தி (11), சரஸ்வதி (7), மாதேஸ்வரி (5) என ஐந்து குழந்தைகள் உள்ளன. மஞ்சுவிற்கும், அவருடைய கணவருக்கும் கடந்த ஓராண்டாகப் பிரச்னை இருந்துள்ளது. இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்துள்ளது.
இந்நிலையில், நேற்று இரவு இருவருக்கும் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மஞ்சு, தனது ஐந்து பிள்ளைகளுடன் கங்கை ஆற்றில் விழுந்து இறந்துவிடலாம் என முடிவு செய்துள்ளார். உடனடியாக, தனது பிள்ளைகள் அனைவரையும் ஆற்றுக்கு அருகில் அழைத்துச் சென்று ஒவ்வொருவராக நீரில் தள்ளிவிட்டு கொலை செய்துள்ளார்.
இதில், அதிர்ச்சியடைந்த மஞ்சு, தனது தற்கொலை முடிவை மாற்றிவிட்டு அதே பகுதியில் தனியாக நின்று கொண்டிருந்துள்ளார். பின்னர், அப்பகுதி மக்கள் விசாரிக்கையில் தான் உண்மை வெளிவந்துள்ளன. இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், மீட்புப் படையினர் குழந்தைகளின் உடலை தீவிரமாகத் தேடிவருகின்றனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, குழந்தைகளை கொலை செய்யக் காரணம் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: '8 லட்சம் பேரை காப்பாற்றிய பூட்டுதல்'- சுகாதார அமைச்சகம் தகவல்