ETV Bharat / bharat

6 மாதங்களுக்கு பிறகு ஜம்மு - காஷ்மீரில் 4G இணைய சேவை! - ஜம்மு காஷ்மீர்

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேச அரசாங்கம் இன்றிரவு முதல் அதிகவேக 4G இணைய சேவை தொடங்கும் என அறிவித்துள்ளது.

author img

By

Published : Mar 13, 2020, 5:39 PM IST

ஜம்மு - காஷ்மீரின் சிறப்பு தகுதி நீக்கப்பட்ட நாளிலிருந்து அங்கு இணைய சேவை முடங்கியிருந்தது. அதன்பிறகு குறைவான இணைய சேவை மட்டும் இயக்கத்தில் இருந்தது. தற்போது கோவிட்-19 தொற்றால் ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேச மக்கள் வீட்டுக்குள் முடங்கியிருக்கும் வேளையில், இன்றிரவு முதல் அங்கு அதிவேக 4G இணைய சேவை பழையபடி இயக்கத்துக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரேடியோ காஷ்மீரிடம் பேசிய அரசு செய்தித் தொடர்பாளர் ரோஹித் கன்சல், இந்த முடிவு வியாழன் அன்று துணைநிலை ஆளுநர் ஜி.எம். முர்மு தலைமையில் நடந்த உயர்மட்ட ஆலோசனை குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதிவேக இணைய சேவையை வழங்குவதன் மூலம் காஷ்மீர் மக்களை வீட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்ற ஒருமித்த கருத்தால் இந்த முடிவு அங்கீகரிக்கப்பட்டது என்றார்.

மேலும் அவர், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கலாம் என முடிவு செய்திருந்தோம். ஆனால் அதனால் இப்பகுதி மக்களை வீட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்ற நம்பிக்கையில்லை. எனவே 4G இணைய சேவையை வழங்குவதே சரி என முடிவு செய்தோம். கல்வி நிலையங்கள் மூடப்பட்டது தொடர்பாக ஸ்ரீநகர் மேயர் ஜுனாயத் அசிம் மட்டு, காஷ்மீர் மண்டல ஆணையர் பசீர் கான் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட பிரச்னை பற்றி துணைநிலை ஆளுநருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது என்றார்.

ஜம்மு - காஷ்மீரில் 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பின், 2019 ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் 4G இணைய சேவை முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.