டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற 8ஆம் தேதி நடக்கிறது. இந்தத் தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி, எதிர்க்கட்சியான பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.
வேட்புமனு தாக்கல் கடந்த 21ஆம் தேதியோடு முடிவடைந்துவிட்டது. இந்த நிலையில் கடைசி நாளான செவ்வாய்க்கிழமை மட்டும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட 806 பேர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்தனர்.
தேர்தல் ஆணையம் அளித்துள்ள அதிகாரப்பூர்வ தகவலின்படி மொத்தம் 1,528 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளனதுள்ளன. இதில் 187 பேர் பெண்கள்.
தேர்தல் ஆணையத்திடம் தாக்கலான வேட்புமனுக்களில் 411 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. மூன்று பேர் தங்களின் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றுக்கொண்டனர். இந்த வேட்புமனுக்களை வாபஸ் பெற நாளை (ஜன24) கடைசி நாளாகும்.
இதையும் படிங்க: அரவிந்த் கெஜிர்வாலை எதிர்கொள்ள பாஜகவின் புதிய ஆயுதம்!