உத்தரப் பிரதேசம் மாநிலம் குஷிநகர் மாவட்டம் கப்தங்கஞ்ச் எனும் இடத்தில் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு தொழிற்சாலை சட்ட விரோதமாக செயல்பட்டு வந்தது. இந்நிலையில், அங்கு எதிர்பாராத விதமாக இன்று (நவம்பர் 4) காலை ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்தனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "தனியாருக்குச் சொந்தமான பட்டாசு தொழிற்சாலை இங்கு செயல்பட்டு வந்தது. இன்று காலை ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்தனர். மாவட்ட நிர்வாகத்திடம் தொழிற்சாலை உரிமையாளர்கள் உரிய அனுமதி பெற்றார்களா என்பது குறித்து தெரியவில்லை. பட்டாசு ஆலையை மூடுவது குறித்து மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்றனர்.
இதனிடையே, இந்த சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்காத மாவட்ட மாஜிஸ்திரேட் உள்ளிட்ட நான்கு காவல்துறையினரை பணியிடை நீக்கம் செய்து உத்தரப் பிரதேச அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், பட்டாசு தொழிற்சாலையை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.