ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள கத்ரா பகுதியின் கிழக்கே 84 கி.மீ. தொலைவில் இன்று காலை 08.56 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகியுள்ளது.
இதேபோல், மாநிலத்தின் ஹேன் பள்ளத்தாக்குப் பகுதியின் வடகிழக்கில் 332 கி.மீ. தொலைவில் உள்ள பகுதியிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால், உயிர் இழப்பு, சேதங்கள் குறித்து எந்தத் தகவலும் இதுவரை வெளியாவில்லை.
கடந்த காலங்களில் காஷ்மீரில் பூகம்பங்கள் பேரழிவை ஏற்படுத்தியுள்ளன. ஜம்மு-காஷ்மீரின் கட்டுப்பாட்டுக் கோட்டின் அருகே 2005ஆம் ஆண்டு அக்டோபர் 8ஆம் தேதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.6 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.