ETV Bharat / bharat

2 தலைவர்களுக்கு முதல்முறை... எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 3ஆம் கட்டத் தேர்தல் - அமித்ஷா

ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதிக்கும், அமித்ஷா போட்டியிடும் காந்திநகர் தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுவதால் அந்த தொகுதிகள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளன.

தேர்தல்
author img

By

Published : Apr 23, 2019, 7:55 AM IST

17ஆவது மக்களவைத் தேர்தல் கடந்த 11ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை இரண்டு கட்ட மக்களவைத் தேர்தல் முடிவடைந்தது. இதனையடுத்து மூன்றாம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை தீவிரமாக நடந்துவந்தது.

இந்நிலையில், குஜராத் (26),கேரளா (20), கர்நாடகா (14), பீஹார் (5),மகாராஷ்டிரா (14), ஒடிசா(6), உத்தரப்பிரதேசம் (10), மேற்கு வங்கம் (5), கோவா (2), அஸ்ஸாம் (4),திரிபுரா (1), ஜம்மு-காஷ்மீர் (1), சத்தீஸ்கர் (7) உள்ளிட்ட மாநிலங்களிலும் டாமன்-டையூ (1), தாத்ரா நாகர் ஹவேலி (1) ஆகிய யூனியன் பிரதேசங்களிலும் உள்ள 117 தொகுதிகளுக்கு மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. ராகுல் முதன்முறையாக தென் மாநிலத்தில் போட்டியிடுவதால் இந்தத் தொகுதி தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதேபோல், பாஜகவின் மூத்த தலைவர் அத்வானியின் கோட்டை என கருதப்படும் காந்திநகரில் அவருக்கு பதிலாக அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா முதல்முறையாக களமிறங்கியிருக்கிறார். இந்தத் தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுவதால் மூன்றாம் கட்டத் தேர்தல் அனைத்து தரப்பினரிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Intro:Body:

3rd phase LS poll begins today at chattisgarh, gujarat, bihar, Karnataka

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.