இன்று மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தின்போது காங்கிரஸ் உறுப்பினர் ஷரத் ரான்பைஸ், கோரேகான் பீமா தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு அவர் இதனைப் பதிலாகத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்து பேசிய அவர், “கோரேகான் பீமா வன்முறையில் பலருக்கும் எதிராகப் பதிவுசெய்யப்பட்ட 649 வழக்குகளில், இதுவரை 348 வழக்குகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. வன்முறை தொடர்பிலான முழு விசாரணை முடிந்ததும் மீதமுள்ள வழக்குகளும் உடனடியாகத் திரும்பப் பெறப்படும்.
2017 டிசம்பர் 31ஆம் தேதி புனேவில் நடைபெற்ற எல்கர் பரிஷத் மாநாட்டையொட்டி நடைபெற்ற கலவர வழக்கை விசாரிக்க, மகாராஷ்டிரா காவல் சிறப்புச் சட்டத்தின்கீழ் விசாரணை ஆணையத்தை அமைக்க மாநில அரசு பரிசீலித்துவருகிறது.
தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) முன்னெடுத்த எல்கர் பரிஷத் மாநாடு வழக்குத் தொடர்பான விசாரணையில் அரசு நம்பிக்கையிழந்து இருக்கிறது.
முந்தைய பாஜக தலைமையிலான அரசுக்கு எதிராகப் பேசிய மக்களை ‘அர்பன் நக்சல்கள்’ என்று முத்திரை குத்தி வழக்குப் பதிந்த பல புகார்கள் அமைச்சகத்திற்கு வந்துள்ளன” என்றார்.
கடந்த ஜனவரி மாதம், எல்கர் பரிஷத் மாநாடு வழக்குத் தொடர்பான விசாரணையை நடத்தும் பொறுப்பு புனே காவல் துறையிடமிருந்து என்.ஐ.ஏ.வுக்கு மாற்றம் செய்யப்பட்டது. அப்போது இந்த நடவடிக்கையை சிவசேனா-என்சிபி-காங்கிரஸ் கூட்டுத் தலைமையிலான மகாராஷ்டிரா விகாஸ் அகாதி அரசு கடுமையாக விமர்சித்திருந்தது.
பின்னர், மாநில அரசு தனது நிலைப்பாட்டை மாற்றி, ‘என்.ஐ.ஏ. இந்த விசாரணையை மேற்கொள்வதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை’ என்று கூறியது கவனிக்கத்தக்கது.
இதையும் படிங்க : மைக்ரோசாஃப்ட் தலைமைச் செயல் அலுவலரைக் கவர்ந்த 13 வயது சிறுமி!