கரோனா வைரசால் பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் சாலையோர வியாபாரிகள் பெரியளவில் பாதிக்கப்பட்டனர். அவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் சாலையோர வியாபாரிகளுக்கான பிரதம மந்திரி ஆத்ம நிர்பார் நிதி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் ரூபாய் வரை கடன் அளிக்கப்படுகிறது. கடன் தவணையை முறையாகத் திருப்பி செலுத்தும் பட்சத்தில் நேரடி பணப் பரிமாற்றத்தின் மூலம் 7 விழுக்காடு கடன் தள்ளுபடி அளிக்கப்படுகிறது. இத்திட்டம் மாநிலங்களில் முறையாக அமல்படுத்தப்படுகிறதா என்பது குறித்து கண்காணிக்க 34 உயர் அரசு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய வனப் பணியை (ஐஎஃப்எஸ்) சேர்ந்த நிரஞ்சன் குமார் சிங்கைத் தவிர மற்ற 33 பேரும் இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்) அலுவலர்கள் ஆவர். வடகிழக்கு மாநிலத்தில் திட்டம் முறையாக அமல்படுத்தப்படுகிறதா என்பது குறித்து கண்காணிக்க எம்.சி. ஜவ்ஹாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஹரியானாவுக்கு நீர்ஜா சேகர், பிகாருக்கு ஹூக்கும் சிங் மீனா, ராஜஸ்தானுக்கு ராஜத் குமார் மிஸ்ரா, தன்மய் குமார், கேரளாவுக்கு ராஜேஷ் குமார் சின்ஹா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இத்திட்டத்தின் மூலம் 50 லட்சம் சாலையோர வியாபாரிகள் பயன்பெறவுள்ளனர்.
இதையும் படிங்க: எமர்ஜென்சி காலத்தின் தியாக செம்மல்களை நாடு மறவாது - பிரதமர் மோடி