இங்கிலாந்தில் புதிய வகை கரோனா வைரஸ் தொற்று பரவிவருகிறது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இங்கிலாந்தில் இருந்து வரும் விமானங்களுக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் தடை விதித்துள்ளன.
மேலும், கடந்த ஒரு மாத காலத்தில் இங்கிலாந்து நாட்டில் இருந்து இந்தியாவிற்கு வந்த பயணிகளின் விவரங்களை கண்டறிந்து, அவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்து சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்த மத்திய அரசு அறிவுறுத்தியது.
இந்நிலையில், டிசம்பர் 22ஆம் தேதி வரை இங்கிலாந்தில் இருந்து மொத்தம் 125 பயணிகள், மத்திய பிரதேச மாநிலத்திற்கு வந்ததாகக் கூறப்படுகிறது. அவர்களில், 93 பயணிகளுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டனர்.
இருப்பினும், மீதமுள்ள 32 நபர்களின் இருப்பிட விவரம் தெரியாததால், அவர்களின் விவரங்களை சேகரித்து தேடும் பணியில் அம்மாநில சுகாதாரத் துறை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.