கர்நாடகா மாநிலம், உடுப்பி பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரா என்பவரின் கால்நடை கொட்டகையில் மலைப்பாம்பு ஒன்று முட்டை போட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து, உடனடியாக பாம்புப் பிடிப்பவருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மனு (பாம்பு பிடிப்பவர்), மலைப்பாம்பையும் 16 முட்டைகளையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது, கொட்டாகைக்குள் மற்றொரு மலைப்பாம்பும், 15 முட்டையும் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து வனத்துறைக்குத் தகவல் அளித்த மனு, இரண்டு மலைப்பாம்புகளையும் பத்திரமாக மீட்டு பிலாரு வனப்பகுதியில் விட்டார்.
இதையும் படிங்க: ஃபிளமிங்கோ பறவைகள் வாக்கிங் சென்ற க்யூட் காணொலி