ETV Bharat / bharat

உத்தரப் பிரதேசத்தில் 300 விவசாயிகள் மீது வழக்குப்பதிவு!

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் 300 விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

300 farmers booked for stubble burning in UP
author img

By

Published : Nov 3, 2019, 11:53 AM IST

உத்தரப் பிரதேச மாநிலம் ஃபிலிப்பிட் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் விவசாயிகள் தங்களது விவசாய கழிவுப் பொருட்களை தெருக்களில் வைத்து எரித்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக தேசிய பசுமைத் தீர்பாயத்தின் உத்தரவின் பேரில், அப்பகுதியைச் சேர்ந்த வருவாய் அலுவலர்கள் புகார் அளித்தனர். இதனையடுத்து சுமார் 300 விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விவசாயிகள் பில்சந்தா, நேரியா, அமரியா, புரன்பூர், சேரமாவூ, மதோடண்டா, ஜகனபாத், பிசால்பூர் மற்றும் கஜ்ராவூலா கிராமங்களைச் சேர்ந்தவர்கள்.
விவசாயிகள் மீதான இந்நடவடிக்கைக்கு எதிராக அவர்கள் வீதிகளில் வந்து காவலர்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்துப் பேசிய உள்ளுர் விவசாயி சரன்ஜீத் சிங், “கரும்புக்கு உரிய விலை கிடைக்கவில்லை, நெல்லுக்கும் போதிய விலை இல்லை. உர பற்றாக்குறையும் உள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் ஏற்கெனவே மனம்வெதும்பியுள்ள விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது கொடுமையானது” என்றார்.

இதையும் படிங்க: விவசாயக் கடனை ஒவ்வொரு முறையும் தள்ளுபடி செய்ய முடியாது: சத்தீஸ்கர் முதலமைச்சர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.