கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டத்தில் கடராய்யன் பால்யா (Kadarayyana palya) கிராமம் உள்ளது. இங்கு வசிக்கும் தம்பதி ஒருவர், இரவு நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் காற்று இல்லாமல் சிரமப்பட்டுள்ளனர். உடனடியாக கதவை திறந்துவிட்டு தனது 3 வயது மகனுடன் சேர்ந்து தூங்கியுள்ளனர்.
அப்போது, திடீரென்று வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை, தூங்கிக்கொண்டிருந்த சிறுவனை தரதரவென வெளியே இழுத்துச் சென்றுள்ளது. வீட்டிற்கு வெளியே புதரின் அருகில் குழந்தையை கொடூரமாக கொன்றுவிட்டு தப்பியோடியுள்ளது.
இதையடுத்து, அதிகாலை குழந்தையை காணவில்லை என தேடிய பெற்றோர், இறந்த நிலையில் குழந்தையின் உடல் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக காவல் துறைக்கும், வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இதையும் படிங்க: காலில் விழட்டுமா... வீட்டு பத்திரம் தரேன் ஒரு குவார்ட்டர் மட்டும் தாங்க!