ETV Bharat / bharat

டெல்லி துணைநிலை ஆளுநர் அலுவலகத்தில் மூவருக்கு கரோனா! - கரோனா வைரஸ் தொற்று

டெல்லி துணைநிலை ஆளுநர் அலுவலகத்தில் பணிபுரியும் மேலும் மூன்று பேருக்கு கோவிட்-19 உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Delhi Lt Governor Anil Baijal
Delhi Lt Governor Anil Baijal
author img

By

Published : May 29, 2020, 12:36 PM IST

இந்தியாவில் கோவிட்-19 தொற்றின் தாக்கம் தொடர்ந்த அதிகரித்துவருகிறது. இந்தத் தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்ட ஒரு மாநிலமாகத் தேசிய தலைநகர் திகழ்கிறது. டெல்லியில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது. இருப்பினும் கரோனா பரவல் கட்டுக்குள் அங்கு முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை.

இந்நிலையில், டெல்லி துணைநிலை ஆளுநர் அலுவலகத்தில் பணிபுரியும் மேலும் மூன்று பேருக்கு கோவிட்-19 உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, புதன்கிழமை ஜூனியர் உதவியாளர் ஒருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.

இது குறித்து ஆளுநர் அலுவலகத்திலுள்ள உயர் அலுவலர் ஒருவர் கூறுகையில், "இரண்டு ஜூனியர் உதவியாளர்கள், ஒரு துப்புரவுத் தொழிலாளி என மூவருக்கு வியாழக்கிழமை கோவிட்-19 உறுதி செய்யப்பட்டுள்ளது" என்றார்.

மேலும், விரைவிலேயே ஆளுநர் அலுவலகத்தில் பணிபுரியும் அனைவருக்கும் கோவிட்-19 பரிசோதனை நடத்தப்படும் என்று அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டெல்லியில் இதுவரை 16,281 பேருக்கு கோவிட்-19 உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 316 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் டெல்லியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கோவிட்-19 உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 9.5 லட்சம் தொழிலாளர்களுக்குப் பணி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.