ETV Bharat / bharat

எண்ணெய் கிணறு தீ விபத்து: அசாம் விரைந்த அமெரிக்க வல்லுநர்கள் - மக்கள் வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்

திஸ்பூர்: அசாம் மாநிலத்தில் எண்ணெய் கிணறு வெடித்த விபத்தில் சிங்கப்பூரைச் சேர்ந்த வல்லுநர்கள் குழு ஆய்வு நடத்திவரும் நிலையில், அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளைச் சேர்ந்த மூன்று வல்லுநர்கள் விபத்து குறித்து ஆய்வு செய்ய விரைந்துள்ளனர்.

3-more-experts-from-us-canada-reach-assams-baghjan-to-control-fire

author img

By

Published : Jun 14, 2020, 12:25 PM IST

அசாம் மாநிலம் டின்சுகியா பகுதியில் உள்ள ஆயில் இந்தியா நிறுவனத்தின் எண்ணெய் கிணறு இரண்டு நாள்களுக்கு முன் எண்ணெய் கசிவினால் வெடித்தது. இந்த விபத்தைக் கட்டுக்குள் கொண்டுவர முற்பட்ட இரண்டு தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் வெளியான கரும்புகை சுற்றுவட்டாரங்களில் பரவத் தொடங்கியதால், 2 கி.மீ தொலைவில் எண்ணெய் நிறுவனத்தைச் சுற்றி வசித்துவரும் மக்கள் வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

எண்ணெய் தொடர்ந்து கசிந்துகொண்டே இருந்ததினால், இரண்டு நாள் போராட்டத்திற்குப் பின்பே தீயைக் கட்டுக்குள் கொண்டுவர முடிந்தது. இதையடுத்து, பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளை துணை ராணுவத்தினர் சுற்றிவளைத்துள்ளனர்.

சிங்கப்பூரைச் சேர்ந்த வல்லுநர்கள் குழு விபத்து குறித்து ஆராய்ந்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்கா, கனடா நாட்டைச் சே்ர்ந்த மூன்று வல்லுநர்களும் இந்த ஆய்வுப் பணியில் ஈடுபடுவதற்காக அசாம் விரைந்துள்ளனர். இவர்கள் கரோனா பரிசோதனைக்காக தனியார் விடுதி ஒன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

3-more-experts-from-us-canada-reach-assams-baghjan-to-control-fire

முன்னதாக, அசாம் முதலமைச்சர் சர்பானந்த சோனாவால் இந்த விபத்துக் குறித்து விசாரிக்க உயர்மட்ட விசாரணைக் குழு ஒன்றினை அமைத்து உத்தரவிட்டார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.