உத்தரகாண்ட் மாநிலத்தின் டெஹ்ராடூனின் சுக்குவாலா பகுதியில் இன்று அதிகாலை கட்டடம் ஒன்று இடிந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மாநில பேரிடர் குழுவினர், மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். காயமடைந்த இருவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.