ETV Bharat / bharat

பத்திரிகையாளர்களுக்கான மிக உயரிய விருது: காஷ்மீர் ஊடகவியலாளர்கள் சாதனை

வாஷிங்டன்: ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான புலிட்சர் விருது, ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த மூன்று பத்திரிகையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீர் ஊடகவியலாளர்கள்
காஷ்மீர் ஊடகவியலாளர்கள்
author img

By

Published : May 5, 2020, 1:28 PM IST

அமெரிக்க பத்திரிகையாளர் ஜோசப் புலிட்சரை போற்றும் வகையில் ஆண்டுதோறும் புலிட்சர் விருது வழங்கப்பட்டுவருகிறது. ஜம்முவைச் சேர்ந்த சன்னி ஆனந்த், காஷ்மீரை சேர்ந்த தார் யாசின், முக்தர் கான் என மூன்று இந்தியர்களுக்கு இந்தாண்டுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து யாசின் தனது ட்விட்டர் பக்கத்தில், "அனைத்து நேரத்திலும் ஆதரவாக இருந்த உடன் பணிபுரிந்தோர், நண்பர்கள், சகோதரர்கள் என அனைவருக்கும் நன்றி கூற விரும்புகிறேன்.

இந்த கெளரவத்தை என்னால் நினைக்துக்கூட பாரக்க முடியவில்லை. இந்த விருதை பெறுவதில் பெறுமைக்கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

வார்த்தைகளற்று உள்ளேன் என தெரிவித்த ஆனந்த், தன்னால் இதனை நம்ப முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார். 20 ஆண்டுகள் உழைத்ததற்கான பயன் கிடைத்துள்ளதாகவும் அவர் பெருமை தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு நிலவும் வாழ்நிலை குறித்த தத்ரூபமான புகைப்படங்களை வெளியிட்ட காரணத்தால் இவர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வைரஸை போல் தீவிரவாதத்தை பரப்புகின்றனர் - மோடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.