பெங்களூருவில் 300 பத்திரிகையாளர்களுக்கு வெள்ளியன்று கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவுகள் இன்று வெளியாகின. அதில் 297 பேருக்கு கரோனா இல்லை என்று தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.
சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை ஏற்பாட்டின் பேரில் பெங்களூரு இந்திரா நகரில் உள்ள சர்.சி.வி. ராமன் பொது மருத்துவமனையில் இந்தச் சோதனையானது செய்யப்பட்டது.
இதேபோல் கடந்த வியாழனன்று 120 பத்திரிகையாளர்களுக்கும் சோதனை நடத்தப்பட்டது. அதில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரியும் ஒளிப்பதிவாளர் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடன் தொடர்பில் இருந்த 36 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதுவரை 762 பத்திரிகையாளர்கள் கர்நாடகாவில் கரோனா தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க:கரோனா பாதிப்பு - கோவை மாவட்ட பத்திரிகையாளர்களுக்கு ரேபிட் சோதனை