ராஜஸ்தான் மாநிலம், அஜ்மர் நகரில் உள்ள சோட்டி நக்ஃபானி என்னும் பகுதியில் நிஷா (26) என்ற பெண் தனது கணவருடன் வாழ்ந்துவந்தார். இந்நிலையில், நேற்று அப்பெண் அவரது வீட்டில் திடீரென்று, சந்தேகமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து தகவலறிந்து சம்பவம் இடத்திற்கு விரைந்தவந்த அஜ்மர் நகர் காவல் துறையினர், உடலைக் கைப்பற்றி உடல்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்தனர். அதைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த காவலர்கள், இது தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணங்களில் விசாராணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: முன்விரோதம் காரணமாக அண்ணன், தம்பிக்கு அரிவாள் வெட்டு