ETV Bharat / bharat

256 ஷ்ராமிக் ரயில்கள் சேவையை ரத்துசெய்த மாநிலங்கள்!

டெல்லி: மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் 256 ஷ்ராமிக் ரயில்களின் சேவையை ரத்துசெய்துள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

migrant workers
migrant workers
author img

By

Published : Jun 4, 2020, 2:05 PM IST

கரோனா ஊரடங்கால் குடிபெயர்ந்த தொழிலாளர்கள் வேலையின்றி தங்களது சொந்த மாநிலங்களுக்குச் செல்ல விருப்பம் தெரிவித்ததால் சிறப்பு ரயில் மூலம் மத்திய அரசு அவர்களைச் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவருகிறது.

அதன்படி, குடிபெயர்ந்த தொழிலாளர்கள் மாநிலம் விட்டு மாநிலம் செல்வதற்காக ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் மத்திய அரசால் இயக்கப்பட்டுவருகின்றன.

இந்திய ரயில்வேயின் தகவலின்படி, மே 1 முதல் மே 31 வரை 4,040 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இவற்றில் 81 ரயில்கள் மட்டும் குறிப்பிடப்பட்ட இடத்திற்கு இன்னும் சென்று சேரவில்லை என இந்திய ரயில்வே குறிப்பிட்டுள்ளது.

அதே நேரத்தில், 256 ரயில்கள் பல்வேறு மாநிலங்களால் ரத்துசெய்யப்பட்டன. இதில் மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்கள் அதிகமான ரயில்களை ரத்துசெய்துள்ளன.

மகாராஷ்டிராவிலிருந்து 105, குஜராத்திலிருந்து 47, கர்நாடகாவிலிருந்து 38, உத்தரப் பிரதேசத்திலிருந்து 30 ரயில்களின் சேவை ரத்துசெய்யப்பட்டிருப்பதாக இந்தியன் ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

50 லட்சத்திற்கும் மேற்பட்ட குடிபெயர்ந்த தொழிலாளர்கள் ரயில்கள் மூலம் அவர்களது சொந்த மாநிலத்திற்குச் சென்றுள்ளதாகவும் ரயில்வே நிர்வாகம் தகவல் கூறியுளது.

இதையும் படிக்க: சினிமா பாடலில் ரயில்வே காவலர் விழிப்புணர்வு பாடல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.