குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் உள்ள ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அமர்நாத் யாத்திரைக்காக லட்சக்கணக்கான மக்கள் போய் வந்தவண்ணம் உள்ளனர். இந்நிலையில் பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், சட்ட ஒழுங்கை கண்காணிக்கவும், பயங்கரவாத நடவடிக்கைகளை தடுக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அதன்படி, கூடுதலாக பல்வேறு முகாம்களில் உள்ள 10 ஆயிரம் மத்திய ஆயுதப்படை காவல் துறையினர் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு, கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக மேலும் கூடுதலாக 25 ஆயிரம் மத்திய ஆயுதப்படை காவல் துறையினர் அனுப்பிவைப்பட்டுள்ளனர்.