கோவிட்- 19 தொற்று நோய் தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட அவசர, அத்தியாவசிய சேவை ஊழியர்களை பிரஹன்மும்பை மாநகராட்சி தங்கும் விடுதிகளில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டனர். அவ்வாறு, தெற்கு மும்பை 1ஆவது மரைன் தெருவில் மருத்துவர்கள் தங்கியிருந்த விடுதியில் நேற்று (மே 27) இரவு பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தங்கும் விடுதியின் முதல் தளத்தில் ஏற்பட்ட தீ, படிப்படியாக மூன்றாவது தளத்திற்கு பரவியது.
இந்த தீ விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள், 8 தீயணைப்பு இயந்திரங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணியில் இறங்கினர். இதன்பின்பு, தீ விபத்தில் சிக்கியிருந்த 25 மருத்துவர்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
அதில், ஐந்து பேர் ஏணி மூலம் மீட்கப்பட்டனர். மேலும், சிலருக்கு மூச்சுத்திணறல் ஏற்படாமல் இருக்க சுவாசக் கருவிகளை வழங்கி மீட்டனர். முன்னதாக, ஏப்ரல் 21ஆம் தேதி தனிமைப்படுத்த பயன்படுத்தப்பட்ட தங்கும் விடுதியொன்றில் தீ விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆழ்துளை கிணற்றில் விழுந்த மூன்று வயது சிறுவன் உயிரிழப்பு