கரோனா வைரஸ் பரவல் காரணமாக, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால், பல்வேறு மாநில அரசுகள் வருவாய் இழந்தன. அதைத்தொடர்ந்து தற்போது ஊரடங்கில் தளர்வுகள் விதிக்கப்பட்டுள்ளதால், தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகளுடன் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. ஆனால், புதுச்சேரியில் மதுக்கடைகள் திறக்கப்படாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் புதுச்சேரி மாநில அரசு மதுக்கடைகள் திறக்க அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் 'புதுச்சேரி, காரைக்காலில் மது விலை வரி உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி புதுச்சேரி, காரைக்காலில் விற்கப்படும் மதுவிற்கு 25 விழுக்காடு கரோனா வரி விதிக்கப்படும்.
மதுவிற்கு 25 விழுக்காடும், சாராயத்துக்கு 20 விழுக்காடும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கள்ளுக்கு வரி இல்லை' என வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: ஒடிசாவில் ஆன்லைன் மது விற்பனை தொடக்கம்!