மகா சிவராத்திரி என்பது இந்துக்களின் ஆன்மிக கலாசாரப்படி ஒரு முக்கிய விழாவாக பார்க்கப்படுகிறது. இன்று மகா சிவ ராத்திரியை முன்னிட்டு, கோயில்களில் சிறப்பு பூஜை மட்டுமல்லாமல் இரவுக்கால பூஜையும் நடைபெறுவது வழக்கம்.
இதனையொட்டி கர்நாடக மாநிலம் கலபுராகி இடத்தில் அமைந்துள்ள பிரம்மா குமரிஸ் மைதானத்தில் சிவலிங்கத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மேலும் 25 அடி உயரமும் சிவலிங்கம் பட்டாணி, சாமந்திப் பூக்களை கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இந்த அலங்காரத்திற்கு 300 கிலோ பட்டாணி பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சிவனின் 'அருள் நிறைந்த இரவு' என்று அழைக்கப்படும் மகா சிவராத்திரியில் அனைத்து சிவன் கோயில்களிலும் சிவ பக்தர்கள் இரவு முழுவதும் கண் விழித்து சிவனை நினைத்து பூஜை செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஈஷா யோகா மையத்தின் மகா சிவராத்திரி விழா