ETV Bharat / bharat

வெள்ளத்திலிருந்து பாதுகாக்கப்பட்ட 2400 ஆண்டு பழைமையான மம்மி! - ஆல்பர்ட் ஹால் அருங்காட்சியகம்

ஜெய்ப்பூர்: ஆல்பர்ட் ஹால் அருங்காட்சியகத்தில் உள்ள 2,400 ஆண்டுகள் பழைமையான மம்மி வெள்ளத்தில் மூழ்காமல் காப்பாற்றப்பட்டது.

2400-yr-old-mummy-in-jaipur-enjoys-fresh-air-after-130-years

author img

By

Published : Aug 19, 2020, 10:44 PM IST

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்துவருகிறது. இந்த மழையால் பல இடங்கள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன. இந்நிலையில், கடந்த 14ஆம் தேதி பெய்த கனமழையில் ஆல்பர்ட் ஹால் அருங்காட்சியகமும் ஐந்து அடி அளவிற்கு நீரில் மூழ்கியது.

இதனால் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த பல்வேறு ஆவணங்கள் உள்ளிட்ட பல பொருள்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.

அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த மம்மி சுமார் 130 ஆண்டுகளுக்கு முன்பு கெய்ரோவிலிருந்து கொண்டு வரப்பட்டது. இது டுட்டு என்ற பெண்ணின் பதப்படுத்தப்பட்ட சடலம் எனக் குறிப்பிடுகின்றனர். இந்த மம்மியானது எகிப்தின் பண்டைய நகரமான பனோபோலிஸின் அக்மின் பகுதியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டதாகவும், 2,400 ஆண்டுகள் பழைமையானது எனவும் தரவுகளின்படி தெரிகிறது.

இந்த மம்மி வெள்ளத்தில் மூழ்காமலிருக்க 130 ஆண்டுகளுக்குப் பிறகு வேறு கட்டடத்திற்கு மாற்றப்பட்டது.

2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த மம்மி ஆல்பர்ட் ஹாலின் அடித்தளத்திற்கு மாற்றப்பட்டது. மேலும், அதன் வரலாறு, பிறப்பு-இறப்பு உறவு, இந்த மம்மியின் எக்ஸ்ரே உள்ளிட்ட அனைத்து விவரங்களும் வழங்கப்பட்டுள்ளன.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.