உலகம் முழுவதும் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டபோதிலும், கரோனா பெருந்தொற்றின் தாக்கம் குறையாமல் அதிகரித்துக் கொண்டே வருகிறது. உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் 79,82,822 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், தெலங்கானா மாநிலத்தில் ஜுன் 14ஆம் தேதி 140 பத்திரிகையாளர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 23 பத்திரிகையாளர்களுக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் முலம் மாநிலத்தில் கரோனாவால் பாதிப்படைந்த பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 60ஆக உயர்ந்துள்ளது. ஒருவர் உயிரிழந்துள்ளார் என மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
நேற்றைய நிலவரப்படி 237 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மாநிலத்தில் கரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நான்கு ஆயிரத்து 974 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 185 பேர் கரோனா வைரசால் உயிரிழந்துள்ளனர். இரண்டு ஆயிரத்து 377 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,20,922லிருந்து 3,32,424 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 11,502 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 325 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 9,195லிருந்து 9,520ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: கரோனா அச்சத்தால் வருவாய்த் துறை அலுவலர் தற்கொலை