மக்களவையில் கேள்வி நேரத்தின் போது, காங்கிரஸ் உறுப்பினர் மணிஷ் திவாரி ஜம்மு-காஷ்மீர் பகுதியில் நடைபெற்று வரும் பயங்கரவாதிகளின் தாக்குதலை குறைக்க மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பினார்.
அதற்கு மத்திய இணையமைச்சர் கிஷன் ரெட்டி பதிலளிக்கையில், 2009ஆம் ஆண்டிற்கு முன்பு ஜம்மு பகுதியில் பயங்கரவாதிகளின் தாக்குதல் 70 விழுக்காடாக இருந்தது. ஆனால் தற்போது 21 விழுக்காடாக குறைத்துள்ளோம். அதாவது 23.290ஆக இருந்த தாக்குதல் சம்பவம் 3.187ஆக குறைக்கப்பட்டுள்ளது என்றார்.