கரோனா பாதிப்பை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் பொதுவெளியில் நடமாடுவதை தடுக்கும் நோக்கில் தீவிர கண்காணிப்புகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுகின்றன. கர்நாடகா மாநிலத்தில் இதுவரை 384 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், 14 பேர் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தனர்.
இந்நிலையில், கர்நாடகாவின் பெல்லாரி மாவட்டத்தில் உள்ள கரிகனரு கிராமத்தில் அம்மாநில அமைச்சர் ஆனந்த் சிங் தலைமையில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு ரேஷன் விநியோகம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த நிகழ்விற்காக அங்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டதால் அப்பகுதியில் சமூக இடைவெளி உத்தரவு அத்துமீறப்பட்டுள்ளது.
மாநில அமைச்சர் விழாவிலேயே இத்தகைய சம்பவம் நடைபெற்றுள்ளது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: ரூ.46 கோடி கரோனா நிதி வழங்கிய பிளிப்கார்ட் நிறுவனம்