ஜார்கண்ட் மாநிலம் ராம்கர் நகரத்தைச் சேர்ந்த 20 வயது பெண் ஒருவரின் தாயார் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்தார். இந்நிலையில் கரோனா தொற்று பயத்தால் உறவினர் யாரும் உதவாத காரணத்தால் அந்தப் பெண் தனது தாயின் இறுதிச் சடங்கை அவரே செய்துள்ளார்.
இதுகுறித்து பக்கத்தில் குடியிருப்பவர் கூறுகையில்;
இது மிகவும் துயரமான காட்சியாகும். அந்தப் பெண்ணின் அழுகையை எங்களால் பார்க்கவே முடியவில்லை. ஆனால் அந்தப் பெண் மிகவும் மனவலிமை கொண்டவர். ஏனென்றால் அந்தப் பெண்ணுக்கு அதிகமான உறவினர்கள் இருந்தும் யாரும் வரவில்லை என்பதால் தாயின் இறுதிச் சடங்கை தானே செய்துகொள்கிறேன் என்று முடிவு செய்துதது. பின்னர்தான் எங்களுக்கு தெரியவந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க: புள்ளி மானை காப்பாற்றி வனத்தில் விட்ட வனத்துறையினர்