சமீபத்தில் கேரள மாநிலம் பதனம்திட்டாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதித்த 2 வயது குழந்தை தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்தாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழந்தை கொரோனா பாதித்த நோயாளியிடம் உரையாடியதால் நோய் பரவிருக்கும் எனக் கருதப்படுகிறது.
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ள நபர்களின் பெற்றோர் கோட்டயம் மருத்துவக் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டு சோதனை மேற்கொண்டுவருகின்றனர். இந்தக் குடும்பம் இத்தாலி நாட்டிலிருந்து வருகை தந்தபிறகு சந்தித்த அனைத்து நபர்களின் பட்டியல்களும் எடுக்கப்பட்டுள்ளது. அதாவது, அவர்கள் சந்தித்த 733 நபர்களையும் கேரள அரசு மருத்துவ கண்காணிப்பில் கொண்டு வந்துள்ளது.
இதையும் படிங்க: கட்டுக்கடங்காத கொரோனா; 4,000 உயிர்கள் பலி