ETV Bharat / bharat

2 ஐடி ஊழியர்களுக்கு எச்1என்1 வைரஸ் - கிளைகளை மூடிய எஸ்.ஏ.பி நிறுவனம்! - sap employees affected due to H1N1 virus at bangalore

பெங்களூரு: எஸ்.ஏ.பி. நிறுவனம் தனது நிறுவனத்தில் பணிபுரியும் இரண்டு ஊழியர்களுக்கு எச்1என்1 வைரஸ் தாக்குதல் இருப்பது உறுதியானதையடுத்து, இந்தியாவில் இயங்கும் மற்ற கிளைகளைத் தற்காலிகமாக முடியுள்ளது.

எஸ்.ஏ.பி
எஸ்.ஏ.பி
author img

By

Published : Feb 21, 2020, 10:02 AM IST

ஜெர்மனியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது எஸ்.ஏ.பி ஐடி நிறுவனம். இந்நிறுனத்தின் கிளைகள் பெங்களூரு, குர்கான், மும்பை ஆகியப் பகுதிகளில் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், எஸ்.ஏ.பி நிறுவனத்தின் பெங்களூரு கிளையில் 2 ஊழியர்களுக்கு எச்1என்1 வைரஸ் தாக்குதல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, எஸ்.ஏ.பியின் அனைத்து கிளைகளையும் தற்காலிமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து எஸ்.ஏ.பி வெளியிட்டுள்ள் அறிக்கையில், " நிறுவனத்தில் பணிபுரியும் மற்ற ஊழியர்களுக்கு பரவாமல் தடுப்பதற்கே இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை. ஊழியர்கள் யாருக்காவது இந்த நோயின் அறிகுறிகள் இருந்தால் உடனடியாகத் தெரிவிக்க வேண்டும். முறையான அறிவிப்பு வரும் வரை, அனைத்து ஊழியர்களும் வீட்டில் இருந்து பணிபுரிய வேணடும்" எனக் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த வைரஸ் இருமல், தும்மினால் உருவாகும் பெரிய நீர்த்துளிகள் மூலமாகவும்,கை குலுக்கல் மற்றும் கட்டிப்பிடிப்பது உள்ளிட்ட நெருங்கிய தொடர்பு மூலமாகவும் எளிதில் ஒருவருக்கு ஒருவர் பரவும் தன்மை கொண்டது ஆகும்.

இந்த எச்1என்1 வைரஸினால், கடந்த 2019ஆம் ஆண்டில் மட்டும் ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஜப்பான் சொகுசுக் கப்பல்: மேலும் ஒரு இந்தியருக்கு கொரோனா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.