ETV Bharat / bharat

ஜம்முவில் கடும் குளிர்: இரண்டு குழந்தைகள் குளிர் காய்ச்சலால் உயிரிழப்பு

author img

By

Published : Jan 18, 2021, 5:14 PM IST

ஸ்ரீநகர்: தீவிர குளிர் காய்ச்சலால் அவதிப்பட்டுவந்த பகர்வால் பழங்குடியின குழந்தைகள் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

2 children die of severe cold
இரண்டு குழந்தைகள் உயிரிழப்பு

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் பகுதியில் பகர்வால் பழங்குடியின பிரிவை சேர்ந்தவர்கள் தற்காலிக கூடாரம் அமைத்து வசித்துவருகின்றனர். அக்கூடாரத்தால் ஜம்மு-காஷ்மீரின் கடும் குளிருக்கு ஈடுகொடுக்கமுடியவில்லை.

இதனால் அந்தக் கூடாரத்தில் வசித்த இரண்டு குழந்தைகள் தீவிர காய்ச்சலால் அவதிப்பட்டுவந்தனர். இதில் 10 வயதேயான ஷாகில் சபிர் கூடாரத்திலேயே உயிரிழந்தார். அவரது சகோதரர் 6 வயதான ஷாசியா ஜான் சிகிச்சைக்காக மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி ஷாசியாவும் மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.

இந்த விவகாரம் குறித்து தேவ்சார் தாசில்தார் அப்துல் ரஷித், ’அதிகபட்சமான குளிரை தாங்க முடியாமல் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோரை முன்னரே வேறு இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தினோம். அதற்கு அக்குழந்தைகளின் பெற்றோர் செவிமடுக்கவில்லை’ என்றார்.

இதையும் படிங்க:புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது - பனிப்போர்வை போர்த்திய காஷ்மீர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.