ETV Bharat / bharat

இரண்டு வாழைப்பழத்தை ரூ. 442 விற்ற ஒட்டலுக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம்! - rahul bose

இந்தி நடிகர் ராகுல் போஸ்யிடம் இரண்டு வாழைப்பழங்களை 442 ரூபாய்க்கு விற்பனை செய்த நட்சத்திர ஓட்டலுக்கு கலால், வரிவிதிப்பு ஆணையம் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

2 வாழைப்பழத்திற்கு ரூ. 442 கேட்ட ஓட்டலுக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம்!
author img

By

Published : Jul 29, 2019, 12:02 AM IST

கமல்ஹாசனின் நடிப்பில் வெளியான 'விஸ்வரூபம்' படத்தில் வில்லனாக நடித்தவர் பாலிவுட் நடிகர் ராகுல் போஸ். இவர் பட ஷூட்டிங்காக சண்டிகரில் உள்ள ஜேடபிள்யூ மேரியட் (JWMarriott) என்ற ஐந்து நட்சத்திர ஓட்டலில் தங்கினார்.

அப்போது அங்குள்ள உணவகத்தில் சாப்பிடுவதற்காக வாழைப்பழங்களை ஆர்டர் செய்திருக்கிறார். அங்கு அவர் 2 வாழைப்பழங்களை வாங்கியதற்கு ஜிஎஸ்டியோடு சேர்த்து 442 ரூபாய்க்கு பில் கொடுக்கப்பட்டதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். அது குறித்து வீடியோவாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், " தான் தங்கியிருக்கும் அறையையும் வாழைப்பழங்களுக்கான பில்லையும் காட்டி, நீங்கள் இதனை நம்பித்தான் ஆகவேண்டும். பழங்கள் சாப்பிடுவதால் தீங்கு ஏற்படாது என்று யார் சொன்னது?" என பதிவிட்டுள்ளார்.

வாழைப்பழம்  பில்
வாழைப்பழம் வாங்கப்பட்டதற்கான பில்

இது சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. இதையடுத்து கலால், வரிவிதிப்பு ஆணையர் இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தார். பழங்களுக்கு வரி விதிப்பதில்லை, விதிகளை மீறி ஜிஎஸ்டி வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள பொருட்களில் ஒன்றான வாழைப்பழத்திற்கு வரி வசூலித்ததற்காக ஜே டபிள்யூ மேரியட் ஓட்டலுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளதாக அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் வீடியோ

Intro:Body:

Rahul bose

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.