கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் உத்தரப் பிரதேச மாநிலம் 7ஆம் இடத்தில் உள்ளது. கரோனா தடுப்புப் பணிகள் காரணமாக தலைநகர் லக்னோவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் 19 பேர் தற்போது கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
லக்னோ கரோனாவால் அதிகம் பாதிப்பு ஏற்படும் மண்டலமாக (hotspot zone) அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 19 காவலர்களுக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டிருப்பது, காவலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் கரோனா பாசிட்டிவ் உள்ள காவலர்களின் எண்ணிக்கை 90ஆக அதிகரித்துள்ளது.
இது குறித்து நமது ஈடிவி பாரத்திடம் மருத்துவர் கேஷ் கூறுகையில், "மாநிலத்தில் அதிகம் பாதிப்பு ஏற்படும் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில், பணிபுரியும் காவலர்களுக்கு அடிக்கடி கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அவர்களுக்கு உரிய முறையில் சிகிச்சையும் அளிக்கப்படுகிறது" என்றார்.
நேற்று மட்டும் 66 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். உத்தரப் பிரதேசத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இரண்டாயிரத்து 53ஆக உள்ளது. அங்கு 462 பேர் குணமடைந்துள்ளனர். 34 பேர் உயிரிழந்துள்ளனர்
இதையும் படிங்க: காவலர்களின் உழைப்பை உணர்த்தும் வீடியோ