ராஜஸ்தான் மாநிலம் சுருவைச் சேர்ந்த 16 வயது சிறுமி கடந்த செப்டம்பர் மாதம் 6ஆம் தேதி தனது ஆடுகளை வழக்கம்போல மேய்ச்சலுக்காக அழைத்துச் சென்றார். அப்போது, ஜீப்பில் வந்தக் கும்பலொன்று அந்தச் சிறுமியை வலுக்கட்டாயமாக ஜீப்பில் ஏற்றிக் கடத்திச் சென்றுள்ளனர்.
இதையடுத்து, அந்த சிறுமியை வேறொரு இடத்திற்குக் கொண்டுச்சென்று அதே கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. மேலும், அக்கும்பல் சிறுமிக்கு தேநீரில் போதைப்பொருளைக் கலந்து கொடுத்து 20 முதல் 25 நாள்வரை தொடர்ந்து வன்கொடுமை செய்துள்ளது.
இந்நிலையில், அந்தக் கும்பலிடம் இருந்து தப்பி வீட்டிற்கு அந்த சிறுமி வந்துள்ளார். பின்னர், அவரது குடும்பத்தினர் சுரு மாவட்ட மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் அடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவின் (ஐபிசி) கீழும், போக்சோ சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. துணை காவல் கண்காணிப்பாளர் சைலேந்தர் இந்தோலியாவிடம் இந்த வழக்கின் விசாரணை ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதைப் போலவே, ராஜஸ்தான் மாநிலம், பார்மர் மாவட்டத்தில் 15 வயது மதிக்கத்தக்க சிறுமியை இருவர் இணைந்து அவரது வீட்டிலிருந்து கடத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இவர்களையும் காவல் துறையினர் தேடி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: குற்றவாளிக்கு பதிநான்கரை ஆண்டுகள் சிறை