ETV Bharat / bharat

வெட்டுக்கிளிகளை அழிக்க தெளித்த ரசாயனத்தை சுவாசித்த 16 தொழிலாளர்கள்  மருத்துவமனையில் அனுமதி...!

ஜெய்ப்பூர்: வெட்டுக்கிளிகளை அழிக்க தெளிக்கப்பட்ட ரசாயன பூச்சிக்கொல்லியை சுவாசித்த 16 தொழிலாளர்களின் உடல்நிலை மோசமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

workers
workers
author img

By

Published : Jul 8, 2020, 5:40 PM IST

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஜெய்சிங்புரா பகுதியில் வேளாண் துறை சார்பாக வெட்டுக்கிளிகளை தடுப்பதற்காக ரசாயன பூச்சிக்கொல்லி மருந்து இரவு நேரத்தில் தெளிக்கப்பட்டுள்ளது.

பின்னர், காலையில் அப்பகுதிக்கு அருகிலிருக்கும் தளத்தில் வேலை செய்வதற்காக 16 தொழிலாளர்கள் வந்துள்ளனர். அச்சமயத்தில் காற்றில் பரவியிருந்த பூச்சிக் கொல்லியை சுவாசித்த தொழிலாளர்களின் உடல்நிலை மோசமடைந்துள்ளது.

பலருக்கு தலைவலி, வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, உடனடியாக அருகிலிருக்கும் மருத்துவமனையில் அனைவரையும் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இதுதொடர்பாக பேசிய மருத்துவர், "பூச்சிக்கொல்லி மருந்திலிருந்த விஷத்தை சுவாசித்ததில் தொழிலாளர்களின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. தீவிர சிகிச்சையின் பிறகு அனைவரின் உடல்நிலையும் தற்போது சீராக உள்ளது. " எனத் தெரிவித்தார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.