ETV Bharat / bharat

கோவிட்-19: இந்தியாவில் 17 ஆயிரத்தை கடந்த பாதிப்பு! - கரோனா வைரஸ் இந்தியா

இந்தியாவில் நேற்று ஒரேநாளில் புதிதாக 1,553 பேருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டதன்மூலம், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,265ஆக அதிகரித்துள்ளது.

1,553 more COVID-19 cases in India, total count reaches 17,265

author img

By

Published : Apr 20, 2020, 12:03 PM IST

இந்தியாவை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, ”இந்தியாவில் நேற்று ஒரேநாளில் புதிதாக 1,553 பேருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,265ஆக அதிகரித்துள்ளது.

அதேசமயம், கடந்த 24 மணிநேரத்தில் இத்தொற்றால் நாடு முழுவதும் 24 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதன்மூலம், அதன் மொத்த எண்ணிக்கை 543ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே, நேற்று ஒரேநாளில் கரோனாவால் பாதிக்கப்பட்டு 316 பேர் குணமடைந்ததால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,547அக அதிகரித்துள்ளது.

கரோனாவால் மகாராஷ்டிராவில்தான் அதிக பாதிப்புகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. நேற்று ஒரேநாளில் அம்மாநிலத்தில் 552 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மகாராஷ்டிராவில் 4,203 பாதிக்கப்பட்டும், 223 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.

இதைத்தொடர்ந்து, அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிராவுக்கு அடுத்தப்படியாக டெல்லி தொடர்ந்து இரண்டாவது இடத்தில் உள்ளது. டெல்லியில் இதுவரை 2,003 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 45 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 72 பேர் இத்தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

இதையடுத்து, ராஜஸ்தானில் 1,478 பேரும், தமிழ்நாட்டில் 1,477 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கரோனாவின் பிறப்பிடமான கேரளாவில் இதுவரை 402 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கரோனா: கேரளாவில் ஊரடங்கில் சில தளர்வுகள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.