மணிப்பூர் பகுதியைச் சேர்ந்த பிரேமலதா என்ற பெண் நீண்டகாலமாக கல்லீரல் கல் பிரச்னையால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அதையடுத்து அறுவை சிகிச்சை நிபுணர்களான டாக்டர் வர்ணா சாகர், மில்னே ஆகியோர் அந்த பெண்ணிற்கு கல்லீரலில் உள்ள கற்களை அகற்ற அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர். அப்போது அவரது உடலில் இருந்து 1,500 கற்களை அகற்றியுள்ளனர். இது மருத்துவர்கள் மத்தியில் பெரும் சாதனையாகப் பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து மருத்துவர் வருண் சாகர் பேசுகையில், அந்தப் பெண் இங்கு வரும்போது மிகவும் அவதியடைந்த நிலையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சிகிச்சைக்கு பெரும் பணம் செலவாகும் என அவரது குடும்பத்தினர் நினைத்த நிலையில், பஞ்சாப் அரசு வழங்கிய இலவச சுகாதாரப் பாதுகாப்பு காரணமாகவும், நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடனும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்தப் பெண் ஆரோக்கியமாக உள்ளார் எனத் தெரிவித்தார்.