மதுபான கடைகளுக்கு முன்பு மக்கள் கூடுவதைத் தவிர்ப்பதற்காக Bev Q என்ற செயலியை கேரளா அரசு வெளியிட்டுள்ளது. இச்செயலி மூலம் டோக்கன் புக்கிங் செய்யும் மக்களுக்கு, டோக்கனில் குறிப்பிட்டுள்ள நேரத்தின் அடிப்படையில் மதுபானம் வழங்கப்படும். இச்செயலி மே27ஆம் தேதியன்று இரவில்தான், மக்கள் பயன்பாட்டிற்கு கூகுள் பிளே ஸ்டோரில் வந்தது.
இத்தகவல் பரவ தொடங்கியதையடுத்து, குடிமகன்கள் செயலியைத் தரவிறக்கம் செய்ய படையெடுக்கத் தொடங்கினர். அதன்படி, நேற்று ஒரேநாளில் 15 லட்சத்திற்கு அதிகமானோர் Bev Q செயலியை தரவிறக்கம் செய்துள்ளனர்.
ஆனால், டோக்கன் புக்கிங் செய்யும்போது, ஒருமுறை கடவுச்சொல் (OTP) குறுஞ்செய்தி கிடைப்பதில் மக்களுக்கு காலதாமதம் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது குறித்து செயலி உருவாக்கிய ஃபேர்கோடு (Faricode) நிறுவனத்தின் ஊழியர்கள் கூறுகையில், "நாங்கள் மக்களுக்கு குறுந்தகவல் அனுப்பும் வசதிக்கு ஒரே ஒரு செல்போன் சேவை மையத்துடன்தான் ஒப்பந்தம் செய்திருந்தோம்.
ஆனால், எதிர்பார்க்காத வகையில் அதிகளவில் புக்கிங் நடைபெற்றதால் OTP குறுஞ்செய்தி கிடைப்பதில் காலதாமதமானது. தற்போது, மூன்று செல்போன் சேவை மையங்களுடன் இணைந்து பணியாற்றும் வகையில் விரிவுப்படுத்தி உள்ளோம். இதன்மூலம், செயலியைச் சீராக கையாள முடியும்" என்றனர்.
இதையும் படிங்க: இந்தியாவின் அரிசிக் கிண்ணமாக தெலங்கானாவை மாற்றும் பணியில் இறங்கிய கேசிஆர்!