கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டது. ஆனால், பொதுமக்கள் வழக்கம்போல் சாலையில் வாகனங்களில் சென்று கொண்டிருக்கின்றனர்.
இதையடுத்து, வெளியே வரும் பொதுமக்களை கண்டிக்கும்போது காவல் துறையினரிடம் சண்டையிடுவதாகவும், கட்டுப்பாடுகளை மீறுவதாகவும் முதலமைச்சருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால், கட்டுப்பாட்டை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கையும், ஓராண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி எச்சரித்தார்.
மேலும், அரசின் உத்தரவை பொருட்படுத்தாமல் இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்த இளைஞர்கள், பொதுமக்களை காவல் துறையினர் லேசான தடியடி நடத்தி, எச்சரித்து அனுப்பினர்.
இதையும் படிங்க: 144 தடை உத்தரவை மீறும் மக்கள்: அதிரடியில் இறங்கிய காவல் துறையினர்!